பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fపు

அவன் பேச்சை அனுதாபத்தோடு கேட்பது போல், அவனையே பார்த்துக் கொண்டு நின்றது.

மறக்க முடியாத அருமையான கதைகளில் இது வும் ஒன்று. செகாவ் மனித உணர்ச்சிகளை நன்கு உணரும் ஆற்றல் பெற்றிருந்தார். மனிதர்களின் உள் ளத்தையும் உணர்வுகளையும் - அவற்ருல் விளையும் பல வீனங்களையும் குணக்கேடுகளையும்-சித்தரிக்கும் அழ கிய கதைகள் அவரது படைப்புகள் ஆகும்.

அவனவன் உணர்ச்சிகள் தான் ஆவன் அவனுக் குப் பெரிசு. குறிப்பிட்ட கணத்தின் உணர்ச்சிதான் அவ்வேளைக்கு ஒவ்வொருவனுக்கும் முக்கியமாகத் தோன்றுகிறது. மனிதர்கள் உணர்ச்சி வசப்பட்டவர் கள். அதனுல் தம்மை மறந்து, பிறரை மறந்து, மணி தத் தன்மையை மறந்து, நல்லது-கெட்டது என்ற உணர்வு மறந்து செயல் புரிந்து விடுகிருர்கள். அவர் களுடைய செயல்களிலே மனித இனத்தின் சின்னத் தனம்தான் மிக்கோங்கி நிற்கிறது-இதை செகாவின் கதைகள் பல நன்கு உண்ர்த்தும். முக்கியமாக, பகை வர்கள்’ என்ற கதையைக் குறிப்பிடலாம்.

ஒரு டாக்டர். அவரது ஒரே மகன் இறந்து போகி ருன். மனைவி துயர மிகுதியால் மயக்க முற்றுக் கிடக் கிருள். இரவு ஒன்பது மணி.

அப்போது ஒருவன் டாக்டரின் உதவியை நாடி வருகிருன், பணக்காரன். தன் மனைவி திடீரென்று கடும் நோயுற்று அவதிப்படுகிருள். டாக்டர் அவசியம் தன்ளுேடு வரவேண்டும் என்று வேண்டுகிருன்.

டாக்டர் தன் நிலைமையைச் சொல்லி, மறுக்கிருர், அவருடைய மனநிலை, வீட்டின் அமைதி, துயரச் சூழ்