பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

கணேச் சுவைத்து அனுபவிப்பதுபோலவும், குடி வகை களின் சிறப்பில் சொக்கிவிட்டவன் போலவும் அவன் திறமையாக நடித்தான். அது மாத்திரமா விருந்தாளி வீட்டுக்காரனைவிட மிஞ்சியும் விட்டான் ! குடி...குடி : என்று போலியாக உபசரித்தான். அவனே குடி போதையே ஏறிவிட்டதுபோல, நல்ல சமயம் பார்த்து பிரபுவை ஓங்கி ஒரு அறை விட்டான் !

பிரபு கோபித்துக் கொண்டான் என்று நினைக்கிறீர் கன அதுதான் இல்லை. புகழ்ந்தான்.

விட்டுக்காரனே வியந்து போகிற அளவுக்கு அமைந்தது அவன் நடிப்பு. வீட்டுக்கார வீணன், விருத்தாளி வீணனைத் தழுவிக்கொண்டான். நீதான் நடிக்கு ஏற்ற ஆள். இன்று முதல் நீ நமது நண்பன் : என்றெல்லாம் புகழ்ந்தான். பிறகு உண்மையாகவே ருசி மிக்க உணவு வகைகளைக் கொடுத்து அவனை உபசரித்து மகிழ்ந்தான். -

அராபியக் கதைகளைப் படிக்கிறபோது, மனிதனது கற்பனை என்னென்ன மாதிரி எல்லாம்தான் வேலை செய்திருக்கிறது என்ற வியப்பு ஏற்படாமல் போகாது.

வேருெரு வீனச்சிகாமணி பற்றிய கதையையும் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.

கஞ்சப் பிரபு ஒருவன். அவனைக் கண்டு, பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு சங்கீத வித்வான் வந்தான். பிரபு முகம் மலர்ந்து வரவேற்ருன். பாடகன் உற்சாகமாகப் பாடினன். கஞ்சன் பலமாகத் தலேயசைத்து, ஆகா போட்டு, ரசித்தான். ஒரு பாட்டு முடிந்ததும், பாகவதருக்கு ஒரு பவுன் எடுத்து வை என்று உத்திரவிட்டான்.

பாடகன் மகிழ்ச்சியோடு மேலும் பாடினன். இந்தப் பாட்டுக்காக இவருக்கு ஒரு சால்வை கொடு!”