பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிரிப் பூக்கள்

ஜெர்மினல் நாவலே மூன்ருவது (அல்லது, நான்காவது?) தடவையாகப் படிக்கிறேன். ஒவ்வொரு தடவை படிக்கிறபோதும் புதுப்புது நயங்கள் தோன்று கின்றன. எமிலி லோலாவின் மேதைக்கு இதுவே சான்ருகும் என்று ஆன்ரீ கைட் தனது ஜர்ன வில் குறித்திருப்பதாக ஜெர்மினல் என்கிற நாவலின் முகவுரை கூறுகிறது.

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க் கையை உண்மைத் தன்மையோடு சித்தரிக்கும் அருமையான நாவல் ஹெர்மினல்

- @

சில புத்தகங்களின் நயங்களை உணர்வதற்குஉய்த்துணர்ந்து ரசிப்பதற்கு- அவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டியது அவசியம் என்றே நானும் கருதுகிறேன். -

எமிலி ஸோலாவின் நாநா’ முதல் வாசிப்பின் போது நல்ல பெயர் பெற முடிவதில்லை. பத்து வருஷங் களுக்கு முன்பு அதை நான் முதலில் வாசித்தபோது, * இதில் பிரமாதமாக என்ன இருக்கிறது? ஒரு தேவடியாள் ஒவ்வொரு பணக்காரகைப் பார்த்துப் பிடித்து நாசப்படுத்தி வருகிருள். இவ்வளவுதானே !’ என்று எண்ணினேன்.

நாநா, நாநா என்கிருர்களே என்று ஒரு புத்தகம் வாங்கினேன். படித்து முடித்தேன். பிரமாதமாக அதிலே ஒண்னுமில்லை என்று அதே சமயத்தில் ஒரு அன்பர் என்னிடம் சொன்னர். -