பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

எண்ணியதில்லை எனவும் கொள்ளலாம்! இது என் மனக்குறளியின் கூற்று.

'அவர் அப்படி ஒரு கொள்கை வகுத்திருந்தால் முகம் என்ற சொல்லுக்கு பதிலாக, பழந்தமிழ் சொல் லேயே உபயோகித்திருப்பாரே!” என்றும் கூறுகிறது அது . -- -

கவி ச. து. சு. யோகியாருடன் பேசிக் கொண்டி ருந்தபோது, முகம் விஷயம்பற்றி நான் குறிப்பிட்டேன். இதில் என்ன சந்தேகம்? முகம் சம்ஸ்கிருத பதடி தான்’ என்று அறிவித்த யோகியார் ரசமான ஒரு விவர மும் தெரிவித்தார் : -

பரிதிமாற்கலைஞன்” என்ற சூரியநாராயண சாஸ் திரியாருக்கும் சம்ஸ்கிருதப் பண்டிதர் ஒருவருக்கும் ஒரு சமயம் வாதம் ஏற்பட்டுவிட்டது. யாம் நுமது தமிழ்த்தாயை நோக்கிய காலே அவள் முகமற்று நின்ருள்’ என்று பண்டிதர் சொன்னர். அதாவது, தமிழில் முகம்’ என்ற சொல் கிடையாது என்பதை அவர் அப்படிக் குறித்தார். அதே போல சம்ஸ்கிருத்தில் வாய் என்பத்ற்குத் த்ன்ச் சொல் கிடையாது. ஆக்வே, பரிதிமாற்கலைஞன் சொன்னர்- ஆரிய அணங்கினை யான் நோக்குங்கால் அவள் மூங்கையாய் நின்ருள்?! ‘ஆரிய அணங்கு ஊமை, அம் மொழியில் வாய்” இல்லை என்று சாஸ்திரியார் சொன்னர். . . . . .

சொல் ஆராய்ச்சி மட்டும்தான சுவை உடையது? சொல் விஷயமாக எழுகிற சண்டைகளும் ரசமானவை தான்! - -

மூலப் பெயரைப் பொருள் பிரித்துப் புதுப் பெயர் காண்பதில் தமிழன்பர்களுக்கு என்றுமே ஆர்வம்