பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய உலகம்

என்னுடைய இந்த ஒரு நாவலப்படித்துப் புரிந்து

கொள்வதற்காக இலக்கிய ரசிகர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடலாமே!’ என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் ஒரு சமயம் சொன்னனும்.

யுலேஸிஸ் என்ற நாவலுக்குப் பிறகு அவன் எழுதிய ஃபின்னிகன் வேக்" எனும் நாவல் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாக இல்லை என்று சில ரசிகர் கள் தெரிவித்தபோதுதான் அவன் அப்படிச் சொன் ஞன.

அவனுடைய தன்னகங்காரத்தைக் குறை கூறு: வோர் கூறலாம். அவனது தற்சிறப்பு மோகத்தைப் பாராட்டுவோர் பாராட்டலாம். நான் அந்த நாவலைப் பார்க்கும் வாய்ப்பைக் கூடப் பெறவில்லை. அதனுல், அவன் கருத்தைப் பற்றியோ அந்த இலக்கியப். படைப்பு பற்றியோ எதுவும் சொல்வதற்கில்லை.

உலக இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயமுடைய நண்பர் க. நா. சுப்ரமண்யத்திடம் ஒரு சமயம் நான் கேட்டேன், நீங்கள் ஃபின்னிகன் வேக் படித்திருக். கிறீர்களா ?’ என்று. - பார்த்திருக்கிறேன் என்ருர் அவர்.

அந்தப் பதிலிலிருந்து அவர் அந்நாவல் முழுவதை.

யும் படித்துப் பார்த்தாரா இல்லையா என்று என்னல் புரிந்துகொள்ள முடியவில்லை.