பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பதும் நிகழ்கின்றன. முடிவில் ஒருவர் தேசவீரன் ஒருவனைப்பற்றிய பாடலை உணர்ச்சியோடு பாடுகிருர்இவ்வளவுதான் விஷயம்.

"இறந்தவர்' ('தி டெட்') என்ருெரு கதை. நூறு பக்கங்களுக்கும் அதிகமாக வருகிறது. இதன் முதல் பாதி வெறும் வம்பளப்புதான். ஒரு வீட்டில் நிகழும் விருந்தில் கலந்து கொள்வோரின் நடவடிக்கைகள், உரையாடல்கள் பற்றிய ரிப்போர்ட்டு தான். பின் பகுதியில் உணர்ச்சியும் அழகும் அமைந்த கதை இருக்

ஜாய்ஸின் சிறு கதைகளில் மூன்று-நான்கு. நல்ல கதைகளும் இருக்கின்றன.

‘டப்ளினர்ஸ்’ என்கிற கதைத் தொகுதி பற்றிய ரசமான உண்மை ஒன்று உண்டு. இதுவரை அது டப்ளின் நகரில் பிரசுரிக்கப்படவே இல்லையாம்.

தனது கதைகளே அச்சில் கொண்டு வருவதற்கு ஜாய்ஸ் அரும்பாடு பட்டான். பிரசுரகர்த்தர் எவரும்ே. அவன் எழுத்துக்களைப் புத்தகமாக்க முன்வரவில்லே. அச்சிட ஒப்புக்கொண்டு, பின் முடியாது என்று மறுத்து, விட்டார்கள் சிலர். ஒரு பதிப்பகம் டப்ளினர்ஸ்’ தொகுதியை வெளியிட ஏற்றுக் கொண்டது. அதன் அதிபரே பிரசில் புரூப் பார்க்கத் தொடங்கினர். வந்தது வினை. ஐவி டே கதையில் எழுதப்பட்டுள்ள கருத்துக்களையும், டப்ளின் வாசிகள் சிலர் பற்றிய பிரஸ் தாயங்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே கடைசி நேரத்தில் அவர் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்.

ஜாய்லின் கதைகளில் ఆGఉత, అవి: எழுதத் திட்டமிட்டு வந்த பெரிய நாவலின் (யுலேஸிஸ்).