பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்துள்ளன; இக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை அவன் பிறகு நாவலில் திறமையாக இணைத்துவிட்டான் என்று

விமர்சகர் ஒருவர் எழுதியிருக்கிருர்.

※ :}; :k

பெங்களுரில் வசிக்கும் நண்பர் ஒருவர் எனக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை:

'ஹிரோஷிமா எனும் படம் பார்த்தேன். சில மாதங்களுக்கு முன்புதான் பெங்குவின் புத்தகம் ஹிரோஷிமா படித்திருந்தேன். கற்பனை நவீனங்களே விட, சில வேளைகளில் பிரத்தியட்ச சத்தியம் நம் உள்ளத்தை உலுக்கிவிடுகிறது. படம் பார்த்தபோது, எனக்கு எரிக் மரியா ரிமார்க்கின் ஆல் கொயட் இன் தி வெஸ்டர்ன் ஃபிரன்ட் விடாமல் நினைவுத் திரையில் நிழலிட்டது...' - . -

எரிக் மரியா ரிமார்க்கின் நாவல் ஒன்று துன்பக் கேணி என்ற பெயரில் தமிழில் வெளி வந்திருக்கிறது. நல்ல புத்தகங்களில் இதுவும் ஒன்று. யுத்தத்தில்ை பாதிக்கப்பட்ட நாடுகளில், இருக்க இடமின்றி எல்லே களுக்கு அங்குமிங்குமாகத் தாண்டி அலைப்புண்டு அவதிப்படும் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய உருக்க மான கதை அது.

- 来 :::

யுத்த பீரங்கி மனித வைக்கோலேயே தின்னும்.’ இங்கிலீஷில் நினைத்துத் தமிழில் எழுதப்பட்ட வரி இது. "கேனன் ஃபாடர்’ என்பதை நினைவில் கொண்டு, இவ்வாறு தமிழில் எழுதியிருக்கிருர் ஒரு எழுத்தாளர்.

வாழ்வதற்கு ஆசைப்படுகிற மனிதர்களை யுத்த பலிகளாக மாற்றும் தொழில்கூட சுலபமாக நடந்துவிடு