பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

வேண்டும் என்று சொல்லி மறைகிருன். அவன் பின்னலேயே புயலும் மழையும், அவனைத் துரத்திச் செல்வது போல், ஓடுகின்றன.

அந்த மனிதனைப் பற்றி அவரவர் அறிந்த விஷயங்களே இதர பிரயாணிகள் பேசிக்கொள்கிருர்கள். அவன் எங்கெங்கோ தென்பட்டிருக்கிருன். பாஸ்டன் நகரத்தை விட்டுப் பல நூறு மைல்கள் தள்ளிய இடங் களில் திரியும்போதுகூட, நான் இன்று இரவுக்குள் பாஸ்டன் போய்ச் சேரவேண்டும்’ என்றே சொல்வான். "நீ போகிற வழி தவருனது. இது என்ன நகரம்’ என்று பிறர் சொன்னலும் அவன் நம்பமாட்டான். அவனும் அவனது கறுப்புக் குதிரையும் இவ்வுலகைச் சேர்ந்தவர் கள்தான? ஆவிகளா? அதீத சக்தி பெற்ற ஆத்மாக் களா? யாரே அறிவர்: அவனைப்பற்றி விதம்விதமான் செய்திகள் கூறப்படுகின்றன.

அவன்தான் பீட்டர் ரக், பாஸ்டன் நகரவாசி. அவனைப் பற்றிய கதைகளைக் கேட்டறிந்த ஜோனதான் என்பவன் பாஸ்டன் சென்று விசாரிக்கிருன். * : * *

முன்னொரு காலத்தில் பாஸ்டன் நகரில் வாழ்ந் தவன் பீட்டர் ரக், சுகவாசி. மிகுந்த கோபக்காரன். கோபம் வந்தால் மனம் போன விதத்தில் சபித்து, வசை கூறும் பண்பு உடையவன். ஆலுைம், நல்ல மனிதன். ஒருநாள் அதிகாலையில் அவன், தனது சிறு மகளுடன், குதிரை வண்டியில் கிளம்பின்ை. கறுப்புக் குதிரை பூட்டிய வண்டி. அவன் திரும்பி வரும்போது மழையும் புயலும் வந்தன. ஒரு இடத்தில் அவன் சிறிது தங்கியபோது, அவனுடைய நண்பன் புயல் வருகிறது. இரவு நேரத்தை இங்கேயே கழிப்பது நல்லது என்று வற்புறுத்தினன். அதனுல் கோபம் கொண்டான் ரக். புயல் வரட்டும். நாசமாய்ப் போகட்டும். எப்படியும் இன்று இரவு நான் என்

4