பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 :

பாஸ்டனில் உள்ள ரக்கின் வீடும் பெரிய நிலமும் ஏலத்துக்கு வருகின்றன. அரசாங்கம் அதைச் செய் கிறது. முன்பு எப்பொழுதோ இங்கு வாழ்ந்த பீட்டர் ரக் இவ்வூரை விட்டுப்போய் ஐம்பது வருஷங்கள் ஆகின்றன. அவனைப்பற்றிய தகவல் எதுவுமே கிட்ட வில்லை. அவனுக்கு உற்ருர் உறவினர் எவருமில்லை. அவன் உயிரோடு இருப்பதாகச் சொல்வதை நாம் எப்படி நம்புவது? அவன் உயிரோடு இருந்தால் அவனுக்கு இப்ப நூறு வயசு ஆகவேண்டும்...... ’ என் றெல்லாம் சொல்லி, ஏலம் கூறப்படுகிறது.

ஏலம் முடிவடையும் தருணம், பேரோசை இடி யென எழுகிறது. நெருங்கி வருகிறது. திடுமென வந்து சேருகிறது. கறுப்புக் குதிரை பூட்டிய பழங்கால வண்டி. அதில் குழந்தையோடு காணப்படுகிருன் பீட்டர் ரக். தனது வீடு இடிந்து சிதைந்து கிடப்ப தையும், அதைச் சுற்றிலும் மனிதர்கள் கும்பலாக நிற்ப தையும் கண்டு திகைக்கிருன் அவன். எல்லோரும் அவனை வேடிக்கை பார்க்கிருர்கள்.

அவனுக்குப் பழக்கமான மனிதர்கள் அங்கில்லை. அவர்கள் சாயலை உடைய புதிய தலைமுறையினரை அவன் காண்கிருன். அதிசயிக்கிருன்.

"இதில் அதிசயம் ஒன்றுமில்லை. உண்மையில் நீர்தான் பெரிய அதிசயம், மிஸ்டர் ரக்! அழிப்பன அழித்து, புதியன புகுத்தும் காலம்தான் உமது வீட்டை அழித்தது; எங்களை இங்கே சேர்த்தது. பல வருட காலம் நீர் ஒரு மாயையில் சிக்கி அவதியுற்றீர். அன்ருெரு நாள் நீர் துணிவோடு இழித்து வசை கூறினிரே அந்தப் புயல் இன்றுதான் ஒய்ந்திருக்கிறது. ஆளுலும் என்ன? உமது வீட்டை நீர் ஒருபோதும் காணமாட்டீர். உம் விடும், உமது மனைவியும், உமக்குத் தெரிந்த அண்டை அயலினரும், மக்கி