பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைந்து போனர்கள். உமது சொத்து இருக்கிறது. ஆளுல், சுகம் தரும் வீடு இல்லை. கடந்த காலத்தி விருந்து அகற்றப்பட்ட நீர் நிகழ்காலத்தோடு பொருந்தப் போவதில்லை. உமது வீடு போய்விட்டது. இந்த உலகத் திலே இனி மற்ருெரு வீடு நீர் பெறப் போவதுமில்லை: என்று யாரோ சொன்ன பேச்சு மேலெழுந்தது.

அருமையான முறையில் பின்னப்பட்டுள்ள கதை இவ்விதம் அழகாக முடிகிறது. வில்லியம் ஆஸ்டின் என்பவரின் கதைகூறும் நயத்தைப் படித்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

வாஷிங்டன் இர்விங் என்பவர் அமெரிக்காவின் பெயர் பெற்ற கதாசியர்களில் ஒருவர். அவர் எழுதிய "ஆவி மாப்பிள்ளை கதைச் சுவை உடையது.

சிறு கதைக்கு உருவம் அமைத்துக் கொடுத்தவர் என்றும், இலக்கியநயம் மிகுந்த கதைகளைப் படைத் தவர் என்றும், மர்மக் கதைகள் எழுதுவதற்கே மூல காரணமானவர் என்றும் புகழப் படுகிறவர் எட்கார் அலன் போ. அவச் எழுதிய சிறந்த சிறு கதைகளில் "அஷர் வீட்டின் வீழ்ச்சி என்பது மிகுந்த கவனிப்பைப் பெற்றது. பல தொகுதிகளில் இடம் பெற்ற பெருமை யும் அதற்கு உண்டு. மர்மம், பயங்கரம், கதைச் சுவை, தடை நயம், சொல்வளம் முதலியன நிறைந்த அருமை யான கதை இது.

நதானியல் ஹாத்தார்ன் எழுதிய ரப்பாஸினியின் மகள் விஞ்ஞான உண்மையை அடிப்படையாகக் கொண்டது. அறிவுப் பசியும் ஆராய்ச்சி வெறியும் பெற்ற ஒரு பேராசிரியரின் கன்னெஞ்சப் போக்கையும், விஷ கன்னிகையாக வளர்க்கப்பட்டு விட்ட மகளின் மென்மையான இதயப் பண்பையும், அவளைக் காதலித்த வாலிபனின் உணர்ச்சிக் குமுறலையும், ஆராய்ச்சி யாளரை முறியடிக்கத் திட்டமிட்டு வெற்றி பெற்றுவிட்ட