பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

அறிஞர் ஒருவரின் தன்மையையும் இனிய முறையில் சொல்கிறது இக்கதை.

கண்ணுக்குப் புலனுகாத ஒன்றைக் கட்டிப்பிடித்து, அதனோடு சண்டை பிடித்து, அதைச் சிறைப் படுத்தி பட்டினி போட்டு சாகடித்த சாகசம் பற்றியது அது என்ன?-பிட்ஸ் ஜேம்ஸ் ஒயிரியன் எழுதிய ரசமான கதை,

ராபர்ட் லூயி ஸ்டீவன்சன், பிராங்க் ஸ்டாக்டன், ஆம்ப்ரூஸ் பீயர்ஸ் ஆகியோர் கதைகளும் உள்ளன, மார்க் ட்வெய்ன் (சாமுவேல் லாங்ஹார்ன் கிளமன்ஸ்) எழுதியுள்ள துப்பறியும் கதை தனிச் சிறப்புடையது; மிகவும் ரசமானது. - , "லெவன் ஸிஸ்’ புத்தகமான இது அருமையான சிறு கதைகள் கொண்ட நல்ல புத்தகம் என்பதை இலக் கிய ரசிகர்கள் எளிதில் உணர்வர். கதைத் தொகுதி' வெளியிடுகிருேம் என்று பெயர் பண்ணி உப்புச் சப்பற்ற கதைகளைத் தேடிப்பிடித்து நல்ல காகிதத்தையும், வாச கர்களின் காலத்தையும், பாழ்படுத்துகிற தமிழ்நாட்டுத் 'தொகுப்பாசிரியர்களும், பதிப்பகத்தாரும் அயல் நாட்டினர் வெளியிடும் சிறுகதைத் தொகுதிகளே என் றைக்காவது புரட்டிப் பார்த்தால் நல்லது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும். நல்லன செய்யும் விசால மனுேபாவம் பெற்றிராத இப் பெருமக்கள் ஜெர்மனியில் உள்ள ஸ்தாபனம் ஒன்று: ஆங்கில இலக்கியத்துக்குச் செய்து வருகிற நற்பணியை எண்ணிப் பார்க்கவாவது இந்தப் புத்தகம் உதவக் கூடும்! -