பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியும் ஆவல்

ஒரு கதை

இரண்டு சிறுவர்கள் ஒரு இடத்திற்குப் போய்விட் டுத் திரும்பி வந்தார்கள். அவர்களிடம் விசேஷம் ஏதாவது உண்டோ? என்று பெரியவர் ஒருவர் கேட்

'ஒன்றுமில்லை’ என்று ஒருவன் சொன்னன். மற் ருெரு சிறுவன் உற்சாகத்தோடு கூறினன்:

"வழியில் பல அதிசயங்களை நான் பார்த்தேன். ஒரு மரத்தில் முன்பு இலைகளே நிறைந்திருந்தன. இப் போது ஒரு இலைகூட அதில் இல்லை. சில செடிகளில் புதிது புதிதாகப் பூக்கள் பூத்து ஜோராக இருந்தன. வண்டி ஒன்று மெதுவாகப் போயிற்று. மாட்டின் கழுத் தில் புண் ஏற்பட்டிருந்தது. அப்படியிருந்தும் வண்டிக் கசரன் மாட்டை வண்டியில் பூட்டி அதை ஈவு இரக்கம் இல்லாமல் அடிக்கிருனே என்று எனக்கு வருத்தம் உண்டாயிற்று...”

இவ்வாறு அந்தப் பையன் விவரித்துக் கொண்டே போனன். பெரியவர் அவனைப் பாராட்டினர். பல விஷயங்களேயும் கூர்ந்து கவனிக்கும் பண்பு ஒவ்வொரு வருக்கும் தேவை; அது அவதானிக்கை எனப்படும் என்றும் அவர் சொன்னர்.

இதை அறியும் அவா. என்றும் சொல்லலாம்.

‘வழியே போய் வழியோடு திரும்புவதை விட்டு விட்டு, பராக்குப் பார்த்துக் கொண்டு போன பையனப்