பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

புதப் பொருளாம்’ என்று கவி தேசிகவிநாயகம் ເor பாடியிருக்கிருர்.

கவிகளுக்கு மட்டும் தான் எல்லாம் அற்புதப் பொருள்களாகத் தோன்றும் என்பதில்லை. ஒவ்வொன் நிலும் அற்புதத்தைக் காணும் பசுமை மனுேபாவம் சிறு பிள்ளைகளுக்கு இருக்கிறது. அதனுல்தான் குழந்தை கள் ஏன்? ஏன்? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. -

குழந்தைகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில் கள்ே - அவர்களுக்குத் திருப்தி தரும் விதத்தில்சொல்ல முடியாதபோது, அல்லது சொல்வதற்குப் பொறுமை இல்லாதபொழுது, பெரியவர்கள் எரிந்து விழுகிருர்கள்; ஏசுகிருர்கள். என்ன இது சும்மா தொணதொணத்துக்கொண்டு!’ என்று கோபித்து, முது கில் இரண்டு பூசைக் காப்பும் கொடுக்கிருர்கள். இத குல் நாளடைவில் குழந்தைகளின் உள்ளம் வறண்டு. போகிறது.

பெரியவர்கள் பதில் சொன்னல் சொல்லட்டும், சொல்லாது போளுல் போகட்டும் என்ற தன்மையில், "ஏன் இது இப்படி இருக்கிறது? ஏன் அது இவ்வாறு தோன்றுகிறது? ஏன் இது வேறு விதமாக இல்லை? என்று ஓயாது கேள்விகளை எழுப்பி, தாங்களாகவே விடை காண முயலும் சிறுவர் சிறுமியரும் இருக்கிருர் கள், அவர்கள் உள்ளம் சதா உணர்வுத் துடிப்போடு திகழ்கிறது.

'இது இப்படித்தான் இருக்கும். எல்லாம் அத. னதன் இயற்கை’ என்று பெரும்பாலாரைப் போல, அறிவுக் குறுகுறுப்பு பெற்றவர்களும் எண்ணி, தங்கள் காரியங்களைச் செய்துகொண்டு போயிருந்தால், அறிவு வளர்ச்சி ஏற்பட்டிராது. ஏன் இப்படி? இது ஏன் இப்