பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

என்ன?-என்று தாங்களாகவே கேள்விகளைக் கேட்டு கொண்டு விடை காண முயன்றவர்களால்தான், விண் ணுலக மர்மங்கள் எல்லாம் தெள்ளத் தெளிந்த பாடங் களாக நமக்குக் கிடைத்துள்ளன. இவ்வித அற்புத ஆற்றல் பெற்ற மனிதர் பலரின் சாதனைகளின் புதிய வளர்ச்சியாக அமைந்திருக்கிறது ருஷிய ராக்கெட்

சந்திரனே எட்டிவிட்ட அற்புதம். -

இந்தத் தலைமுறையிலே வாழும் நாம் பாக்கிய சாலிகள்’ என்றே சொல்ல வேண்டும். நமக்காக ஒளி: எப்போதும் காத்திருக்கிறது. நாம் கண்டுபிடிக்கக் கஷ்டப்பட்டு அலேய வேண்டியதில்லை. ஆராய்ச்சியின் விளைவுகளும், அறிவு நூல்களும் எளிதில் கிடைக்

கின்றன. * • * *

ஒரு ஸ்விட்சைத் தட்டினுல் போதும். எலெக்ட்ரிக் பல்புகள் உள்ள இடமெங்கும் ஒளி சிரிக்கிறது. ஒரு குமிழைத் திருகினுல் ரேடியோ இன்னிசை வழங்கு கிறது. நினைத்தவுடன் காரிலும், ரயிலிலும் - வசதி இருந்தால் ஏரோப்ளேனிலும்-ஏறி, எளிதில் தூரத்தை வென்றுவிட முடிகிறது. ஆகவே, இவை எல்லாம் இயல்பானவை. ரொம்ப காலமாக இப்படியே இருப் பவை” என்று எவ்வளவோ பேர் நம்பியிருக்கிருர்கள். இவை இல்லாத காலமும் இருந்தது; இவை எல்லாம் ஒரே நாளில் தோன்றிவிடவில்லை; அறிவுப் பசியும், ஆராயும் வேகமும், சிந்திக்கும் ஆற்றலும், செயல்திற மும் பெற்றிருந்த பலப்பலரின் ஓயாத உழைப்பின் விளைவுகளே இவை. -

இவற்றைப் பற்றி எல்லாம் படிக்கிறவர்கள் பரீட் சையில் பாஸ் மார்க் வாங்குவதற்காக மட்டும் படிப்ப தோடு திருப்தி அடைந்துவிடக் கூடாது.

செளகரியங்களை உண்டாக்கித் தந்திருக்கிற காலம்

சோம்பலை வளர்க்கவும் துண் செய்துவிட்டது.