பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இருக்கும் என்று ஆசைப்பட்டுக் கொள்வான். எனினும், வெறும் ரொட்டியும் தண்ணிருமே வரவழைப் பான். அந்த ரொட்டியையே, மிக விலை உயர்ந்த தீனியாகக் கற்பனை செய்து கொண்டு, சிறிது சிறிதாகச் சுவைத்து மகிழ்வான். உண்மையிலேயே, அவனுக்குக் கற்பனை அதிகம் தான்! அழகு மிக்க மங்கையரையும், பாரீஸ் மாநகரின் ஆடம்பரவல்லிகளையும் கூடி மகிழ வேண்டும் என்று ஏங்கின்ை அவன். ஆரம்ப நாட் களில் அதற்குத் தேவையான பொருளும் புகழும் வாய்ப்பும் வசதிகளும் அவனுக்குக் கிட்டியதில்லை. இரவு நேர நடைபாதை நங்கையரைக் கூடும் வசதி தான் இருந்தது. அப்படி அழகற்ற, குரூபியான, கோரங்களைக் கூடிச் சுகிக்கின்ற காலத்திலும் அவன் செல்வச் சரசாங்கிகளையும், ஆடம்பர அழகு சுந்தரிகளே :பும், மேனிமினுக்கி மோகளுங்கிகளையும் கொஞ்சிக் குலாவுவதாகவே எண்ணுவது வழக்கமாம்.

இவ்வாறு நிகழ்கால வாழ்வின் வறட்சியை மறக்கக் கற்பனே எனும் போதையின் துணையை நாடுகிறவர்கள் நிறையவே காணப்படுவர். மனித சமுதாயத்திலே எதிர் காலப் பசுமையையும், புகழ் ஒளியையும் எண்ணி ஏங்கிக்கொண்டு, நிகழ்காலத்தில் விந்தை செயல் களையும் விசித்திரப் போக்குகளையும் அனுஷ்டிக்கிற அப் பாவிகள் நல்ல வேடிக்கை மனிதராகத் திகழ்வர். இத் தகைய மனிதர்களை சில ஆசிரியர்கள் வெற்றிகரமான கதாபாத்திரங்களாக இலக்கியத்தில் உலாவ விட்டிருக் கிருச்கள்.

பல சிறந்த நாடகங்களைப் படைத்துள்ள இப்ஸ்ன் எனும் ஆசிரியர் பீயர் ஜைன்ட்’ என்ருெரு நாடகமும் எழுதியிருக்கிருர்.

பீயர் எனும் வாலிபன் மகா சோம்பேறி, குடிகார குக வாழ்ந்து சொத்து முழுவதையும் அழித்து விட்ட