பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழங்கிவரும் கதை

இரவில் அமுத ஒளி வீசி உலகை அழகு மயமாக் கும் சந்திரன் தினந்தோறும் மாறிக்கொண்டே இருப்பது கவிஞர்கள், கலேஞர்கள், கதைஞர்கள் ரசனைக்கும் கத் பனைக்கும் வேலை கொடுத்து வருவது போலவே சாதாரண மக்களின் கற்பனைக்கும் வேலை தருகிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மனித உள்ளம் கதை கட்டுவதில் உற்சாகம் காட்டத் தவறுவ தில்லை. அம்புலி வளர்வது தேய்வது பற்றியும் வெவ் வேறு இடங்களில் வெவ்வேறு விதமான கதைகள் இருக்கலாம். புராதனமான கதைகள் இரண்டு ஒரே தன்மை உடையனவாக இருக்கின்றன. இரண்டும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் பற்றிய கதைதான்.

ஒன்று-இந்தியாவில் உள்ள சந்தால் இன மக்க ளிடையே வழங்கி வரும் கதை:

ரொம்ப ரொம்ப காலமாக-பாட்டன் முப்பாட்டன் மார்கள் காலத்துக்கும் முன்பிருந்தே-எல்லோருக்கும் தெரிந்த விஷயம் இது. சூரியன்தான் கணவன். அம்புலி அவன் மனைவி. இரண்டு பேரும் சேர்ந்து ஏகப் :பட்ட குழந்தைகளை உற்பத்தி செய்துவிட்டார்கள். அவர்களில் ஆண் பிள்ளைகள் எல்லோரும் அப்பாவைச் சுற்றிக் காணப்படுவார்கள். பெண் குழந்தைகள் அம்மா கூடவே இருந்தார்கள்.