பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஒன்று வானத்தில் தலைகாட்ட வேண்டியதுதான், மற்றது. உள்ளே போய் மறைந்து கொள்ளும். அம்புலியின் துரோகம் நினைவில் எழுந்துவிட்டால் போதும்; சூரியன் தடியைத் தூக்கிக் கொண்டு அதைத் துரத்துவான். அதனுல்தான் சில தினங்களுக்கு ஒருமுறை அம்புலி ஆகாயத்தில் தலைகாட்டாமல் பதுங்கிக் கொள்கிறது. பயம்தான் காரணம். -

இது இந்தியக் கதை. மற்றது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நைஜீரியாவில் வசிக்கும் யோருபா இன மக்க

கிளிடிம் அடிபடுகிற கதை ஆகும்- -

ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்பு, சூரியனும் சந்திரனும் மிகநெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். ஒருநாள் சந்திரன் சூரியனிடம் சொன்னன், நண்பனே, நாம்த்மது பிள்ளைகளைத் தொலைத்து தலைமுழுகிவிடலாம். அத்ோ அந்த ஆற்றில் அவர்களைத் தள்ளி விடுவோம்’ எனது.

சூரியன் இதற்கு இணங்கினன். மின்னிமினுக்கும் தன் குழந்தைகளை எல்லாம் ஒரு சாக்கில் போட்டுக் கட்டினன். ஆனல் சந்திரன் தனது பிள்ளைகளை மறைத்து வைத்தான். கோணிப்பை நிறைய கூழாங் கற்களைப் போட்டு கட்டி எடுத்து வந்தான். சூரியன் பேச்சு வார்த்தை தவருமல், தன்னுடைய சாக்கு மூட் டையை, குழந்தைகளோடு ஆற்றில் வீசிவிட்டான். சந்திரன் கற்கள் நிறைந்த சாக்கையே தண்ணிரில் விட் டெறிந்தான்.

பொழுது விடிந்ததும், சூரியன் வழக்கம் போல்

வானவீதியில், பவனி வரக்கிளம்பினன். அவனைச்

சுற்றிலும் பிரகாசிக்கக் கூடிய அவனது குழந்தைகள் இல்லாமலே அவன் நடந்தான்.