பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய மணிகள்

உலகத்திலே எந்தக்காலத்திலும் மூளை பிரதர்’ களுக்குக் குறைவு கிடையாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, உல்லாசமாக வாழ்வதற்கு என்னென்ன வழிகள் உண்டு என்பதில் இவர்கள் மூளை தீவிரமாக வேலைசெய்யும். எப்படியாவது யாரையாவது ஏமாற்றி, தாம் உயர்ந்து விடவேண்டும் என்று செயல்புரிகிற “ஐடியா மாஸ்டர் களில் சுவாரஸ்யமான மனிதர்களும்

இந்த ரக ஆசாமி ஒருவன் மிகுந்த தோரணை யோடு, ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நகரத்தில் பிரவேசித் தான். மக்கள் விழித்தெழுந்து, போராடி, புதியதோர் உலகம் செய்ய முனைந்திராத காலம் அது. ரஷ்யாவில் பஞ்சமும், கொடுமையும், சுயநலமும், சிறுமைகளும், சோம்பேறித்தனமும் சுகவாச மோகமும் மலிந்திருந்த காலம் அது. வீனர்களும் வெறும் பயல்களும் பெருத்துக்கிடந்த காலம் அது. ஊதாரித்தனமும் ஊழல் களும், வெளிப்பூச்சும் படாடோபமும் மண்டி வளர்ந்த காலம் அது. பண்ணை அடிமைமுறை அமுலில் இருந்தது. அடிமைகள் மனிதர்களாக மதிக்கப்பட்ட தில்லை. அவர்களுடைய உழைப்பின் பலனை முழுவதும் ஆண்டு அனுபவித்த பண்ணையார்களும், மனிதர்கள் போல் வாழவில்லை. தடிப்பண்ணி களாகத்தான் காலம் ஒட்டினர். அரசாங்க அலுவலகங்களில் லஞ்ச மும் ஊழல்களும் ஆனந்தக் கூத்து ஆடிக்களித்தன.

இச்சூழ்நிலைகளைப் பயன் படுத்திக் கொண்டு சுலப மாக முன்னேறிவிடலாம் என்று நம்பின்ை ஒரு