பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

“ஐடியா மாஸ்டர்’. ஒவ்வொரு பண்ணையாரும் பலநூறு. அடிமைகள் வைத்திருந்தார்கள். ஒரு ஆளுக்கு இவ். வளவு பணம் என்ற விகிதத்தில் அரசருக்கு வரியும் கட்டிவந்தார்கள். ஜனத்தொகைக் கணக்கெடுப்பு' எடுத்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. அடுத்த கணக். கெடுப்புக்கு இன்னும் எவ்வளவோ காலம் பிடிக்கும். இடைக்காலத்தில், அடிமை ஆட்களில் எத்தனையோ பேர் செத்திருக்கலாம். அநேகர் ஓடிப்போயிருக்கலாம். கொள்ளை நோய் பலரை விழுங்கியிருந்தது. ஆயினும், அவர்கள் பெயர்கள் அரசாங்கப் பட்டியலிலிருந்து நீக்கப்படாத காரணத்தால், அவர்களும் உயிரோடிருப் பவராகக் கருதப்பட்டு, அவர்களுக்கும் வசிப்பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையைத் தனக்கு. சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டான் அந்த வீணன்,

நகரத்தில் தடபுடலாக வந்து தங்கிய அந்த உல்லாசி நகர அதிகாரிகள், பிரமுகர்கள், பண்ணே யார்களோடு தொடர்பு கொண்டான். அவன் தோற்ற மும், உற்சாக குணமும், உல்லாசப் போக்கும் பல ரையும் எளிதில் அவனது நண்பர்களாக்கின. பலரும் அவனைத் தம் வீட்டில் விருந்து உண்ண அழைத்தார்கள். . . . . . . . . ;

பண்ணையார்கள் வீட்டுக்கு விருந்தாளியாகப் போன்ை அவன் பேச்சோடு பேச்சாக தனது அதி: முக்கிய பிஸினஸ் பற்றியும் பிரஸ்தாபித்தான். "உங்களிடமுள்ள செத்த ஆட்களை (Dead Souis), நான் விலக்கு வாங்கிக்கொள்கிறேன். நியாயமான வியாபார முறையில்தான். பத்திரம் எழுதிப் பதிவு: செய்வோம்’ என்றெல்லாம் சுவையாக அளந்தான்.

ஜாலியான பண்ணையார் அவனிடமுள்ள இறந்து ஆட்கள் அனைவரையும் அவனுக்கு அன்பளிப்பாகத்.