பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தர முன் வந்தான். ஒரு பண்ணைக்காரன், கஞ்சன் போல் பேரம் பண்ணி எவ்வளவு பணம் கறக்க முடியு மே அவ்வளவு பிடுங்கினன். சூதாடியும் குடிவெறி யனும் ஊதாரியுமான ஒருவன் அவனை மிரட்டி விரட்டு கிருன்.

இந்த விதமாக, பலரக வேடிக்கை மனிதர்கள். சித்தரிக்கப்படுகிருர்கள். வீ ண ன் அவர்களோடு நடத்தும் வியாபாரம் பற்றி சுவையாக வர்ணிக்கப்படு கிறது. அளவுக்கு அதிகமான நிலமும் பணமும் உடை யவர்கள் எவ்வாறு திலத்தையும் பணத்தையும், தங்கள் வாழ்வையும் தங்களை அண்டியிருப்போர் வாழ்க்கை யையும் பாழ்படுத்துகிருர்கள் என்கிற உண்மை கதைச் சுவையோடு மலர்கிறது.

எவரையும் நம்பாத மனிதர்கள், யாரிடமும் கல கலப்பாகப் பழகும் தன்மையுடையவர்கள், எரிந்து விழும் பண்பினர், புதுமை மோகத்தோடு சூழ்நிலைக்குப் பொருந்தாத முறைகளை அனுஷ்டிக்கத் தவித்து எல்லா வற்றையும் உருப்பட விடாமல் செய்கிறவர்கள், பெருந்தீனிப் பிண்டங்கள், சாப்பிடாமலே கிடந்து பணம் திரட்ட முயல்வோர்-இப்படி விந்தை மனிதர்கள் பலரையும் சந்திக்கிருன் கதாநாயகன். எதற்கு, ஏன் என்று சொல்லாமலே ஏகப்பட்ட செத்த ஆட்கள்’ வாங்கிவிட்டான். அதிகார பீடத்தில் உள்ளவர்களின் நட்பின் பலத்தால் பத்திரங்களைப் பதிவு செய்துமாயிற்று.

ஆரம்பம் முதல் நகரம் முழுவதும் அவனை வியந்து பாராட்டிக் கொண்டிருந்தது. அவன் பேரத்தில் சிறு சந்தேகம் கொண்ட ஒரு பண்ணைப் பெருமாட்டிநாட்டுப்புறக் கிழவி-நகரம் வந்து சேர்ந்து, அவனைப் பற்றி அவதூறு பரப்பிச்செல்கிருள். வீணனுக்கு வேண்டாத பப்ளிஸிட்டி சூருவளி வேகத்தி