பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

நிபுணர் என்ருர். அப்படி வைரங்களே சோதித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு விபத்து நேர்ந்து விட்டது என்ருர்.

"அப்படியானுல் தேயிலேத் தோட்டமும் புலி வேட் டையும் என்ன ஆயிற்று?’ என்று விளையாட்டாகக் கேட்டார் டாக்டர். .

'வைர வியாபாரியான எனக்கும் தோட்டத் துக்கும் என்ன சம்பந்தம்? புலி வேட்டையா? என்ன டாக்டர், என்ளுேடு விளையாட விரும்புகிறீர்களா?? என்று, தாம் மிகவும் அவமதிக்கப் பட்டுவிட்டது போல், பேசினர் பீயர்ஸன்! -

டாக்டருக்கும் தாதிக்கும் ஒரே குழப்பம். ஆளைப் பார்த்தால்-சந்தேகமே யில்லை. நேற்று வந்த அதே நபர்தான். குரல் கூட ஒன்றுதான். ஆல்ை பேசும் தோரணையும் பழகும் விதமும் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன: மிஸ்டர் மூர்தான் பீயர்ஸனு, அல்லது...... - - -

"மிஸ்டர் மூர்? யார் இது? எனக்குத் தெரியாதே: என்று சொன்ன பீயர்ஸன் திடீரென்று வெகுண்டெழுந் தார். அவர் முகத்தில் கடுகடுப்பு குடிகொண்டது. உாக்டர் மீது எரிந்து விழுந்தார். கோபித்துக் கொண்டு வெளியே ஓடினர். . . . .

ஆகவே, சந்தேகமில்லை. இருவரும் ஒருவர்தான்’ என்று டாக்டர் தீர்மானித்தார். இப்படி ஆளுக்குள்ளே ஆளு’ புகுந்து கொள்கிற அதிசயம் அவ்வப்போது உலகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அவர் அறிவார்.

-ஜெர்மனியில், மிகவும் கண்ணியம் வாய்ந்த திறமை மிகுந்த ஸர்ஜன் ஒருவர் இருந்தாராம். அவர்