பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

கிறது. அரசாங்க அதிகாரிகள் திடுக்கிடுகிருர்கள். தலைமை அதிகாரியின் மகளை அவன் கடத்திச் செல்லத் திட்டமிட்டு விட்டான் என்ற வதந்தி வேறு அதன் விளைவுகள் கதை வளர்ச்சிக்கு வேகமும் சுவையும் தரு கின்றன. அவன் செத்த நபர்களை மட்டுமே விலக்கு வாங்கியது ஏன் என்று புரியாமல் தவிக்கார்கள் எல் லோரும்.

அந்த ஆடம்பரக்காரன் நிலைமையை உணர்ந்து, சாமர்த்தியமாக அந்த ஊரைவிட்டே ஓடிவிடுகிருன். வேறு ஒரு வட்டாரத்தில் போய் தன் வியாபாரத்தை ஆரம்பிக்கிருன். -

அந்நாளைய ரஷ்யாவில் பண்ணை வைத்திருந் தவன்-பல நூறு அடிமைகளின் சொந்தக்காரன்-பெரு மதிப்பு பெற்று, இஷ்டம்போல் வாழமுடிந்தது. சமூகத் தில் அவனுக்கு அதிக கெளரவமும் கிட்டியது. அதற் காகவா அந்த வீணன், செத்த ஆட்கள்’ பட்டாளம் சேர்த்தான்? இல்லை, இத்தனை அடிமைகள் இருக்கிசூர் கள், இவ்வளவு நிலம் இருக்கிறது என்று பத்திரத் தைக் காட்டி, அரசாங்கத்திலிருந்து பெருந்தொகை கடனுகப்பெற வாய்ப்பும், வசதியும் இருந்தன. இதை அறிந்த வீணன், உயிரோடு இல்லாத அடிமைகள்ை மலிவு விலைக்கு வாங்கி, பத்திரங்களைக் காட்டி-இல்லாத ஒரு பண்ணைக்கு ஆதாரங்களும் காட்டி-பெரும்பணம் பெற ஆசைப்பட்டான். முன்பு பல தில்லுமுல்லுகள் செய்து, அனுபவித்து, பேராசை வளர்த்து பெரும் தகிடுதத்தங்களில் ஈடுபட்டு தண்டனையும் பெற்றவன் தான். அதனல் என்ன? கூரிய அறிவும், சுறுசுறுப்பும், வாழும் ஊக்கமும் மேற்கொண்டிகாரியத்தில் முழு மூச் சுடன் ஈடுபடும் உற்சாகமும் உடையவன் அவன். இத்தகைய மூ தர்கள்-ஐடியா மாஸ்டர்களின்