பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அவன் நிலம் வாங்குவதற்காகச் சில பண்ணையார் களைச் சந்திக்கிருன். அவர்களும் விந்தை மனிதர்கள் ாதன் ! உழைக்காமலே வாழ்ந்து, சமூகத்தையும் நாட் டையும் நாசமாக்கும் வீணர்களின் போலிப் பகட்டுகளைபொம்மை வாழ்வை-அம்பலப்படுத்துவதற்காகவே நிக் கோலே கொகோல் டெட் ஸோல்ஸ் என்ற அருமை யான நையாண்டி இலக்கியத்தை உருவாக்கி இருப் பார் என்று தோன்றுகிறது.

நாட்டினரின் வாழ்விலும் ஆட்சி முறையிலும் மண்டிக்கிடந்த சிறுமைகளையும் சீரழிவுகளையும், சிரிக்க வைக்கும் முறையில் சித்தரித்துக்காட்டி சிந்திக்கத் துண்டியிருக்கிருர் கொகோல்.

ரஷ்யாவின் அன்றைய இழி நிலையை-நாட்டு மக்களின் சிறுமைப் பண்பை-கண்டு, எண்ணி மனம் குமைந்து, வேதனைப்பட்டவர் அவர், எத்த கைய மகத்தான ஆற்றல் செயலுருப்பெருது பாழ டைந்து கிடக்கிறது! மக்கள் தங்கள் சக்தியை உண ராமல் இப்படி அவல வாழ்வு வாழ்கிருர்களே!-என்ற அங்கலாய்ப்பு அவர் எழுத்துக்களில் பல இடங்களில் ஒலிசெய்கிறது. ஆலுைம் பேராற்றல் மிக்க இப் பெரிய நாடு என்றும் இதே நிலையில் இருந்துவிடாது என்பது உறுதி. என்றேனும் ஒருநாள் அதன் சுயத் தன்மையை அதற்குச் சுட்டிக்காட்டி அதைத் தீவிர மாகச் செயல்படவைக்கும் திறமை பெற்றவன் ஒருவன் தோன்றுவான். இது உறுதி என்றும் அவர் டெட். லோல்ஸ்’ நாவலில் எழுதியிருக்கிருர்.

இது தீர்க்க தரிசனம் போல் நிறைவேறிவிட்டது தான் வரலாறு ஆயிற்றே!

ரஷ்யாவின் பழங்கால இழிநிலபற்றி மனம்கு வேதனையோடு புலம்பாத இலக்கியாசிரியன் அ