பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சித்திரங்கள்

புகழ்பெற்றுவிடுகிற பெரிய எழுத்தாளர் களைக் கண்டுபேச வேண்டும் என்ற ஆசை பலருக்கு ஏற்படு வது உண்டு, அவரும் நம்மைப்போல் ஒரு மனிதர் தானே, எல்லா விஷயங்களையும்பற்றி சகஜமாக அவ. ரிடம் பேசலாம்’ என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற் படுவதில்லை. ரொம்பப் படித்தவர் மாதிரி காட்டிக் கொள்ளவேண்டும். நமது அறிவுப் பிரகாசத்தை வெளிச்சமிட வேணும். இல்லே யென்ருல் அவர் நம்மை மோசமாக மதிப்பிட்டுவிடுவார்’ என்ற தூண்டுதல் அவர்களை விசித்திரமாக நடந்து கொள்ளச் செய்யும்.

兹 எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலத்துக்கும் பொதுவான உண்மை இது.

ஆண்டன் செகாவ் இலக்கிய உலகத்தில் மிகுந்த கீர்த்தி பெற்ற ரஷ்ய ஆசிரியர். அவர் அற்புதமான சிறுகதைகளும், உயர்தர நாடகங்களும் எழுதி இருக்கி ருர். அவர் உயிரோடிருந்த காலத்தில், எளிய வாழ்க். கையே வாழ்ந்தார். அவர் ஆத்ம சுதந்திரத்தோடு, தனது தனித் தன்மை ஒளிவீசும் விதத்தில் வாழ்ந்தார் என்று மாக்ஸிம் கார்க்கி குறிப்பிட்டிருக்கிருர். அவர் அழகிய எளிமையில்ை ஆனவர். எளிய, யதார்த்த மான, உண்மை நிறைந்த அனைத்தையும் அவர் நேசித் தார். மற்றவர்களையும் எளியராய் மாற்றும் தனி வழி ஒன்றும் அவர் பெற்றிருந்தார்’ என்று கார்க்கி கூறுகி ருள்.

செகாவை கண்டுபேச அவ்வப்போது யாராவது வரு வது வழக்கம். ஒருசமயம் மூன்று அலங்காரவல்லிகள்