பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகத்தான உண்மை

கொம்படர்ந்த தேமாவில் குலைகுலையாய் காய்கள் தொங்குவதைக் கண்டால், கல்லெடுத்து எறிய வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டாகிறது. அள வுக்கு அதிகமாக, அழகு அழகான பூக்களைச் சுமந்து நிற்கும் செடிகொடிகள் எங்களைக் கிள்ளுங்கள்; கொய் யுங்கள்’ என்று வழியே போவோரின் ஆசையைத் துண்டுகின்றன.

இந்த உலகத்தையும், உயிர்களின் வாழ்க்கையை யும் இயக்குகிற சக்தியும் பார்க்கப் போனல் குறும்புத் தனம் பெற்றதுதான். நிறைவையும் மிகுதியையும் காண்கிறபோது, தாக்கிச் சீர்குலைய வைக்க வேண்டும் என்ற துடிப்பு அதற்குச் சில் சமயம் ஏற்படுவது உண்டு. பூரணமும் பெரும் மகிழ்வும் பெற்றுவிடும் மனித வாழ்வு இயக்கும் சக்தியின் விஷமப் பண்புக்கு சாம்பிராணிப் புகை’ போடுவது போலவும் அமையலாம்! தன்னிலே தானேயாகித் தனது இன்பத்தில் ஆழ்ந்து, களி துலங்கச் சிரித்தபடி விளங்கும் குழந்தையைச் சீண்டி, கிள்ளி, அழவைத்து வேடிக்கை பார்த்து மகிழும் ஆசை சில ருக்கு ஏற்படுகிறதல்லவா? அந்த மாதிரி ஆசை இயக் கும் சக்திக்கும் எழும். அப்போது மனிதர்கள்பாடு ஆபத்துதான்!

அலெக்ஸாண்டர் குப்ரின் என்கிற ரஷ்யக் கதாசிரி யர் அழகாக எழுதியுள்ள ஒரு சிறு கதை இந்த எண் ணத்தை வலியுறுத்துகிறது.

ஒரு பெரிய மனிதர். வெளியூரில் சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு, வீடு திரும்புகிருர். ஊரில் சொந்த