பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

லுட்விக் என்ருெரு பாதிரியார். ஒரு ஞாயிற்றுக் கிழமை வேர்வை கொட்டக் கொட்ட விழித்தெழுந்தார். அவருக்குக் கோபம் வந்தது. அன்றும் ஒரே நிலைதான். வானம் நீலமாய் பளிச்சிட்டது. புழுக்கம் வேறு. மழை வருவதற்குரிய அறிகுறியே இல்லை. சின்னஞ் சிறு மேகத்துணுக்குகூட வானவெளியில் மிதக்கவில்லை. ஆனல் மழையோ இன்றியமையாத் தேவை இப்போது.

சோளப்பயிர் அழியும் நிலையில் இருந்தது. ஒட்ஸ் எப்படியோ உயிரோடிருந்தது. பார்லி வெளிறிக்கொண் ருந்தது. நிறைய உரம் போட்டு, பாடுபட்டு, உழைத்த, விவசாயிகள் வாழ்க்கை இவற்றை நம்பித்தானிருந்தது. அவர்கள் அனைவரும் பக்தி மிகுந்தவர்கள். தேவாலயக் காணிக்கை செலுத்தத் தவருதவர்கள். விளைவு: இல்லாது போல்ை அவர்கள் காணிக்கைதான் எவ்வாறு செலுத்த முடியும்? எல்லோரும் முறையிட் டார்கள். வறண்ட காலநிலை குறித்துப் புலம்பினர்கள்.

பாதிரியார் ஆறுதல் கூறினர். ஆண்டவன் கை விடமாட்டான்; புனித யோவான் புண்ணிய தினத்தை, ஒட்டிவரும் ஞாயிறு அன்று விசேஷப் பிரார்த்தனை நடத்துவோம்; மழை அவசியம் வரும் என்று அவர் உறுதியாய் அறிவித்தார்.

அன்றுதான் அந்த ஞாயிற்றுக்கிழமை. அவர் உறுதிமொழி பொய்யாகுமானல், அவர் வாழ்வுதான் என்னுகும்? பக்தர்களை நம்பித்தானே அவர் வாழ்க்கை. நடத்தவேண்டியிருக்கிறது? அவருக்கு நாற்பது வயசாகி விட்டது. இன்னும் மணமாகவில்லை. இப்போதுதான் அதற்கு ஒரு வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருந்தது.

தனிவிடு அமர்த்தி, தேவையான கட்டில், நாற். காலி மாச்சாமான்கள் அனைத்தையும். கடனில் பெற்ற,