பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இருந்தது. பாதிரியார் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே என்பதற்காகப் பேசலானர் : இன்று மழை எப்படி?

ஒகோ, பீத்திக்கொள்ள வந்துவிட்டாயோ?” என்று சீறி எழுந்தார் ரீமான் லுகு.

'பெருமையடித்துக் கொள்ளமாட்டாரா பின்னே? என்று பக்கப்பாட்டு பாடவந்தாள் ரீமதி.

‘எங்களைக் கேலிபண்ணவா இங்கு வந்தாய்? எனச் சிடுசிடுத்தார் அவர்.

நம்ம வீட்டிலே பெண் கொள்ளலாம் என்று எண் னினரே இவரு!’ என்று பழித்தாள் அவள்.

"உனது நல்ல செயலின் பலனை நீயே பாரு’ என்று பாதிரியைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார் குடும்பத் தலைவர். உன் கண்ணுலே பாரு!’

‘இவரு பெரிய பாதிரி! நம்ம வீட்டு வருங்கால மாப்பிள்ளை!’ என்று முனங்கினுள் அவர் மனைவி.

அவர்கள் ஆத்திரத்துக்கும் ஆங்காரத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. பெரும் பரப்பில் கண்டு முதலாகி யிருந்த கிளோவர் பூண்டு கண்ணெட்டும் தூரம்வரை வட்டம் வட்டமாகப் பரப்பப் பட்டிருந்தது வெயிலில் உலருவதற்காக வயல்களிலும் புல்தரைகளி லும் வைக்கோல் குவிந்து கிடந்தது. எங்கு பார்த்தா லும் ஒரே வைக்கோல் மயம். வெயில் அடிக்கும் என்ற தெம்பில் எல்லாம் அலட்சியமாக விடப்பட்டிருந்தன. பெருமழை அனைத்தையும் பாழ்பண்ணி விட்டது.

'துரதிர்ஷ்டம்தான்!” என்ருர் பாதிரி.

'துரதிர்ஷ்டமல்ல. சீர்குலைவும் பாப்பர் நிலையும் தான். எல்லாம் பேச்சு. பாழாச்சு. இன்று இரவுக்