பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

பட்டணந்தனை விட்டு பசுக்கிடைக் கேகும் நேரம்
மட்டிலா தாகமுண்டாய் வந்தனர் தண்ணீர் தன்னில்”
 
“குனிந்தவர் தண்ணீர் கோரிக் குடித்துமே தாகம் தீர்ந்து
பணிந்துமே கிடைக்குப் போக பாவையர் பாடுமோசை
இனந் தெரியாமல் கேட்டு ஏங்கியே முத்துப்பட்டன்
வனந்தனில் சுத்தி ஓடி மறித்திட்டான் பெண்கள் தன்னை”

அவர்களை மறித்து அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளும் படி முத்துப்பட்டன் கேட்கிறான். அவர்கள் மறுத்துப் பேசுகிறார்கள்.

பட்டன் : பெண்ணே உன்னைப் பெற்ற தாய்தகப்பன் ஆரு சொல்லு பேதமை கொள்ளாது சற்றே என்முன்னாக நில்லு.

பெண்கள் : பின்னே வழிவிட்டு ஓடணுமானாலும் கல்லு, வேறே பரியாசஞ் சொன்னால் பறிப்போமே பல்லு, சாம்ப சிவ நாதர் போலிருக்கிறீர் சுவாமி சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி.

பட்டன் : ஆண்டவன் செயலினாலுங்களைப் பெற்றாளே மாமி, அல்லாமல் வேறில்லை தாகந் தணிந்திட நேமி.

இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் ஓடிக் காட்டுக்குள் மறைகிறார்கள். பட்டன் அவர்களைத் தேடி அலைந்தும் காணாமல் மயங்கி விழுந்து விடுகிறான்.

ஓடிப்போன பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தங்கள் தகப்பன், வாலப்பகடையிடம் போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவன் வெகுண்டெழுந்து மாடறுக்கும் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு அரசடித்துறைக்கு வந்தான். அங்கே பட்டன் புழுதியில் மயங்கிக் கிடப்பதைக் கண்டான். அவனே யறியாமல் பட்டன்மீது இரக்கமுண்டாயிற்று. கையைத் தட்டிச் சப்த முண்டாக்கினான். பட்டன் எழவில்லை. சிறு கல்லொன்றை எடுத்து அவன் மீது எறிந்தான். பட்டன் கண் விழித்தான். “நீ யாரென்று” கேட்டான். வாலப்பகடை, தன் மக்களிருவரை ஒரு பார்ப்பான் மோசம் செய்ய முயன்றதாகவும்