பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





19. திசைகள்



சூரியன் முளைப்பது கிழக்கு
சொல்லின் இதுவே வழக்கு.
மறையும் பக்கம் மேற்கு
மனதில் ஐயம் நீக்கு.
நின்று கிழக்கு நோக்கு
நன்று கையைத் தூக்கு.
வலக்கைப் பக்கம் தெற்கு
வாதம் வேண்டாம் இதற்கு.
இடக்கைப் பக்கம் வடக்கு
போதும் கையை மடக்கு.

20