பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20. மழைமழையே, மழையே, பெய்வாயே;
மாணவர் மகிழச் செய்வாயே.
சிறிதே தூறிச் செல்லாதே;
சிறியோர் துயரம் பொல்லாதே.
கப்பல் பலவே பண்ணுவமே;
கடிதில் விடவே எண்ணுவமே.
கத்திக் கப்பல் விடுவோமே;
கையால் நீரைத் தொடுவோமே.
கப்பல் கண்டால் எள்ளாதே;
கடலில் கொண்டு தள்ளாதே.
வானில் மேகம் கண்டிடுவோம்;
‘வாவா மழையே’ என்றிடுவோம்.

21