பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துப்பாடல்கள்.pdf24. கைத்தொழில்

கைத்தொழில் கற்றிட வேண்டும்-அதை
நித்தமும் போற்றிட வேண்டும்.

கைத்தொழில் இல்லாத நாடு-புலி
கரடிகள் வாழ்கின்ற காடு.

மெத்தவும் சுற்றிடல் ஏனோ?-உயர்
மெத்தையில் தூங்கிடத் தானோ?

எத்துணைப் பேர்கல்வி கற்றார்?-இங்கே
என்னநம் நாட்டினர் பெற்றார்?

பட்டங்கள் பெற்றிடப் போவார்-சிறு
பாயும் முடைந்திட லாகார்.

சின்னஞ் சிறுவரே நீரும்-அவர்
செல்வழி போகாதீர் வாரும்.

25