பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இப்போதே பற்பல செய்வீர்-என்றும்
இன்புட னேஇருந் துய்வீர்.

கூடை முடைந்திட வேண்டும்-உயர்
ஆடையும் நெய்திட வேண்டும்.

பெட்டிகள் செய்திடக் கற்பீர்-பெரு
மேசையும் செய்துபின் விற்பீர்.

சீனச் சிறுவரைப் பாரீர்-உயர்
சீமைச் சிறுவரைப் பாரீர்.

யாவரும் கைத்தொழில் கற்பார்-கலை
யாவும் சிறப்புற நிற்பார்.முத்துப்பாடல்கள்.pdf26