பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துப்பாடல்கள்.pdf26. அப்பாவைப்போல் நான் ஆனால்

அப்பா வைப்போல் நான் ஆனால்
ஆயிரம் ரூபாய் சேர்த்திடுவேன்;
ஆனை குதிரை வாங்கிடுவேன்.

அப்பா வைப்போல் நான் ஆனால்
மாடி வீடு கட்டிடுவேன்;
மோட்டார் வண்டி வாங்கிடுவேன்.

அப்பா வைப்போல் நான்ஆனால்
தண்ணீர்ப் பந்தல் வைத்திடுவேன்;
தருமம் பலவும் செய்திடுவேன்.

அப்பா வைப்போல் நான் ஆனால்
எங்கும் பொன்னே குவித்திடுவேன்;
எல்லோ ருக்கும் அளித்திடுவேன்.

அப்பா வைப்போல் நான்ஆனால்
உலகம் முழுதும் சுற்றிடுவேன்;
உண்மை பலவும் கற்றிடுவேன்.

28