பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துப்பாடல்கள்.pdf29. பன்னிரண்டு மாதங்கள்

தமிழ் மாதங்கள்

சித்திரை யோடு வைகாசி
சிறந்த நல்ல இளவேனில்;
ஆனி ஆடி மாதங்கள்
அப்பா! மிகவும் முதுவேனில்;
ஆவணி யோடு புரட்டாசி
ஆகா! அழகிய கார்காலம்;
ஐப்பசி கார்த்திகை வந்தாலோ
அந்தோ! மிகவும் குளிர்காலம்;
மார்கழி மாதம் தைமாதம்
முன்னே பனிதான் பெய்மாதம்;
மாசி பங்குனி மாதங்கள்
பின்னே பனிபெய் மாதங்கள்.

32