பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







33. பருத்தி


பச்சைச் செடியில் நான் பிறந்தேன்-உயர்
பருத்திக் காயினுள் நான் இருந்தேன்;
மெச்சும் வகையில் நான்வளர்ந்தேன்-மிக
மேன்மையும் வெண்மையு மாய்த் திகழ்ந்தேன். 1

என்னை வெளியில் எடுத்து விட்டார்-இங்கே
ஏற்றபடி யெல்லாம் செய்துவிட்டார்;
அந்நிய நாடுகள் சென்றலைந்தேன்-அங்கே
ஆலை பலவும்நான் கண்டறிந்தேன். 2

பஞ்சுமெத் தைகளும் தலையணையும்-கொண்டு
பாலர்கள் தூங்குவ தென்னாலே;
கஞ்சியில் லையென்போர் கைராட்டையால்-தினம்
கொஞ்சி மகிழ்வதும் என்னாலே. 3