பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துப்பாடல்கள்.pdf35. நமது கடமை

பேருடனே புகழ் பெறுவோம்-நம்மைப்
பெற்ற நன் னாட்டுக்கே உதவிகள் புரிவோம்.
சீருடன் செல்வமும் சேர்ப்போம்-நல்ல
சீமான்கள் என்ன வே சிறப்புடன் வாழ்வோம்.
(பேரு)

ஐந்து வயதுள்ள சிறுவன்-நீரின்
ஆவியால் யந்திரம் இயக்கிய ஒருவன்
தந்த உதவியி னாலே-இந்தத்
தரணியில் உள்ளவர் புகழ்வது போலே
(பேரு)

நிலக்கரி வாரிய சிற்றாள்-நல்ல
நீராவி வண்டிக ளால்புகழ் பெற்றான்.
விலக்குதற் காருளர் நம்மை-நாமும்
வேண்டி உழைத்திடில் வந்திடும் நன்மை
(பேரு)

41