பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாடும் புகைப்படப் பெருமை-இது
பத்திரி கைவிற்ற பாலகன் உரிமை.
நாடு புகழ்கின்ற தன்றோ-நாமும்
நற்பெயர் பெற்று நிலவுதல் என்றோ?-
(பேரு)

வான விமான உயர்ச்சி-இரு
வாலிபர் கூடி உழைத்த முயற்சி.
ஈனமன் றோநமக் கென்றும்-இந்த
உலகினுக் குதவுதல் இலைஎனில் ஒன்றும்-
(பேரு)

மோட்டார் எனும்வண்டி பெற்றோம்-மற்றும்
மின்சார வண்டியும் தீபமும் உற்றோம்.
காட்டாள் எனப்படு வோமோ-ஒன்றும்
கண்டறி யாமலே வாழ்ந்திடு வோமோ-
(பேரு)

பற்பல சாத்திரம் கற்போம்-இந்தப்
பாரினில் நாமும் சிறப்புற நிற்போம்.
அற்புத யந்திரம் செய்வோம்-நம்மை
அனைவரும் கொண்டாடிப் போற்றிட உய்வோம்.-
(பேரு)

42