பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சிறுவர்: கருமைச் சிறுகுயில் நீ
காகம் போல்இருந்தும்
அருமைக் குரலுனக்கே
அமைந்த தெவ்வாறே?.
4
குயில்: குணம்போல் குரல் அமையும்;
கோபம் தாபங்கள்
கணமும் வாராமே
காப்போர் பெறுவாரே.
5
சிறுவர்: என்றும் இனிமையுடன்
இசைக்கும் சிறுகுயிலே!
உன்றன் குணம் அமைய
உரைப்பாய் வழிஎமக்கே.
6
குயில்: இன்சொல் இயம்பிடுவீர்;
ஏதம் நினையாதீர்;
புன்சொல் புகலாதீர்;
போதும் சிறுவர்களே.
7
சிறுவர்: பொன்போல் போற்றிடுவோம்
புனிதச் சிறுகுயிலே!
அன்பால் நீயுரைத்த
அருமை மதியினையே.
8

46