பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அருகே இருந்த அரிய நாவல்
    மரத்தின் நிழலை அடைந்தாள்;
பருக வேண்டிப் பலவும் எண்ணிப்
    பெரிதும் உள்ளம் உடைந்தாள். 4

மரத்தின் மேலோர் சிறுவன் கனிகள்
    பறித்தல் கண்டு மகிழ்ந்தாள்;-அவள்
உரத்துக் கூவித் தனக்கும் சிறிதே
    உலுக்கிப் போடப் புகழ்ந்தாள். 5

‘சுட்ட பழமோ? சுடுதல் இல்லாப்
    பழங்கள் தரவோ? சொல்லாய்-நின்
இட்டம் உரைப்பின் ஈவேன் உனக்கே
    இயம்ப வேண்டும் நல்லாய்.’ 6

சிறுவன் கூறும் சொல்லின் பொருளைச்
    சிந்தை செய்ய லானாள்;-பொருள்
அறியா ளாகி ஐயம் தீரும்
    வகையில் வினவ லானாள். 7

‘சுடுதல் இல்லாக் கனிதா’ என்றே
    சொல்லி முடிக்கு முன்னே-அவன்
கடிதே கிளையைக் குலுக்க உதிரும்
    காயும் கனியும் என்னே! 8

நாவல் மரத்தின் நலமார் கனிகள்
    நிலத்தில் இருத்தல் கண்டாள்-நீர்
ஆவல் மிகுந்த அவ்வைக் கிழவி
    அகத்தில் மகிழ்வு கொண்டாள். 9

52