பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முத்தொள்ளாயிர விளக்கம் விளக்கம் : மா குதிரை. பாயுமாறு பாயாது என்பது பாயுமா பாயாது என்று திரிந்தது. உபாயமா - மெதுவாக குதிசை என்று தோன்ரு எழுவாய் இங்கு வருவிக்கப்பட்டது. பாயுமா - பாயும் குதிரை எனப் பொருளுரைத்தது அண்மை விளியாகவும் கொள்ளலாம். இப்பொழுது பாயுமா, போரகத்துப்போல பாயாது உபாயமா நடவாயோ ? என்று பொருள்கொள்ளல் வேண்டும். மதிவெங்களியான அறிவுடைய கொடிய மதயானை, மதி அறிவு, வெம்மையாவது, திரிதல்; அறிவு திரிந்த மத யா ைஎன்றவாறு. மாறன்றன் மார்பம் - பாண்டியனது மார்பை. கதவங் கொண்டு யாமும் தொழ-கதவின் இடுக்கில் கின்றுகொண்டு யான் தொழும் படி, யாம் . நான் ; ஒருமை பன்மை மயக்கம். இந்தக் கவிதை, பெண்ணின் கூற்று என்பது வெளிப்படையா கத்தெரியவில்லை. பெண் கதவருகில் மறைந்து நிற்பதுபோல் இதுவும் மறைந்து நிற்கின்றது! இப்படிச் செய்தியை மறைவில் வைத்துச் சொல்லுவதில் ஒரு காண பாவம் உண்டாகின்றது. கதவங் கொண்டு யாமும் தொழ’ என்ற இறுதியடியைக் குரல் குறைத்துப் பாடும்போது இந்த நாண பாவம் வெளிப்படுவதை அறியலாம். எண்ணத்தின் இந்தப் பிரதிபிம்பத்தைக் கவிதையில் காம் காணுங்கால் கவிதையனுபவத்தின் கொடுமுடி நமக்குத் தட்டுப்படுகின்றது. (27)