பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[29] காதல்வெறிப் பேச்சு இள்வெறியை விடக் காதல்வெறி உறைப்புடையது; ஆற்ற லுடையது. கட்குடியர்கள் கள்ளை கினைந்து பார்த்தோ அல்லது அதனை நேரில் கண்ணுல் கண்டோ மகிழ்ச்சி அடைவதில்லை; அதனை உண்டால்தான் அவர்கட்கு மகிழ்ச்சி ஏற்படும். காதலுக்கு உரிய வரை நினைத்தாலும், அவரைக்கண்டாலும் அவர்மீது காதல் கொண்ட வர்கட்கு எல்லையற்ற மகிழ்ச்சி யுண்டாகின்றது. காதல் உணர்ச்சி முற்றி வெறி கிலே எய்திவிட்டால் அதன் விளைவு தனிச்சிறப் புடையது. மாவூர்ந்து வருகின்ருன் மாறன்; உலாப் போகின்றன். அவன் இவர்ந்து வந்த புரவி வேகமான நடையினை உடையது. அவன்யால் காதல் கொண்ட கங்கையர் அவனைக் காண்கின்றனர். அவர்கள் அவனது அழகில் ஈடுபட்டு மெய்மறந்து கிற்கின்றனர். இதற்குள் புரவலன் ஏறிவந்த புரவி விரைந்து அடுத்த தெருவிற்குச் சென்று விடுகின்றது. தெருப்புழுதி முகத்தில் அள்ளித் தெளிக்கும்வேகத்தில் புரவிபோகின்றது. கதவருகில் கின்றிருந்த காரிகை யொருத்தி பாண்டியன் அணிந் திருந்த பூமாலை, இவர்ந்து வந்த குதிரை முதலியவற்றை யெல்லாம் கினைக்குந்தோறும் அப் பொருள்கள் அவளது காதலை மிகவும் வளர்க் கின்றன ; எரிகின்ற கெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோலாகின் றது. காதல் வெறியால் அவளுக்கு என்ன செய்வது என்றே தோன்ற் வில்லை. ஓடிச்சென்று புரவியைக் கட்டித் தழுவிக்கொள்ளலாமென் ருல், குதிரை எளிதில் கைக்குக் கிடைக்கக்கூடிய பொருளா ? அப்ப டிக் கிடைத்தாலும், தன்னுடைய காதல் கிலே பிறருக்குப் புலப்பட்டு விடுமே. இந்த நிலையில் அவள் தெருவினை நோக்குகின்ருள். வழுதி யின் புரவி கால்களால் துழாவிய புழு தி ையக் காண்கின்ருள். நெஞ்சை நோக்கி இவ்வாறு பேசுகின்ருள்: