பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முத்தொள்ளாயிர விளக்கம் 'நெஞ்சமே, மடுவில் விழுந்து நீராடுவதைப்போல், வீதியில் கிடக்கும் புழுதியில் விழுந்து புரண்டு புழுதியாடட்டுமா? அல்லது அப்புழுதியை எடுத்து வந்து ஆண்டவனின் பிரசாதம்' போல் - திருநீறுபோல்-தலையில் தூவிக்கொள்ளட்டுமா? அல்லது நறுமண முள்ள நீரில் குழைத்துப் பூ இதழை எழுதுகோலாக்கிக் கொண்டு மார்பிலும் தோளிலும் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா ? எதனைச் செய்தால் என் நோய் தீரும்?” என்கின்ருள். - கங்கையின் மன நிலையை விளக்கும் கவிஞரின் சொல்லோவியம் இது: ஆடுகோ சூடுகோ வைதாக் கலந்துகொண் டேடுகோ டாக வெழுதுகோ - நீடு புனவட்டப் பூந்தெரியற் பொற்றேர் வழுதி கனவிட்டங் கால்குடைந்த நீறு. இது கைக்கின; நெஞ்சொடு கூறல். விளக்கம் , ஆடுகோ மூழ்குவேனே : கீழே விழுந்து புரளுவேளுே என்றவாறு குடுகோ - சூடிக்கொள்வேன திருறுேபோல் தலையின்மீது தாவிக்கொள்வேளு என்றவாறு ஐதா - அழகியதாக, கலந்துகொண்டு - புழுதியை கன்ருகக் குழைத்துக் கொண்டு. ஏடு பூவிதழ் ; இதழையுடைய அரும்பு என்றும் கூறலாம். கோடாக - எழுதுகொம்பாக. எழுதுகோ அழ காக மார்பிலும் தோளிலும் தொய்யில் எழுதிக்கொள்ளட்டுமா. தொய்யில் என்பது, மகளிர் தம் மார்பிலும் தோளிலும் எழுதிக்கொள்ளும் வரிக் கோலங். கள். கீடு நீண்ட ; பெரிய புனவட்டப் பூக்தெரியல் - பூந்தோட்டத்தி லிருந்து அப்பொழுதுதான் பறித்து வட்டமாகக் கட்டிய மாலை. தெரியல் . மாலை. வழுதி பாண்டியன். கனவட்டம் பாண்டியனுடைய குதிரையின் பெயர். கால்குடைந்த நீறு குளம்புபட்ட தெருவிலுள்ள புழுதி, இந்தக் கவிதையில் அரிய உணர்ச்சியும் பாவமும் நெளிவது புலப்படும். பாட்டினைப் பாடிப்பாடி இவற்றைக் காண்க. ஆண்டவ னிடத்திற் காட்டிலும் அடியார்களிடத்தில் ஈடுபாடுள்ள பட்டினத்