பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொம்பன்ஞர் காமம் 73 இந்த நிலையை அணியிழையாரின் இயல்பை அறிந்தோர் கூறு வதுபோல் கவிஞர் அமைத்த சொல்லோவியம் இது : குடத்து விளக்கேபோற் கொம்பன்னும் காமம் புறப்பட பூந்தார் வழுதி-புறப்படின் ஆபுகு மாலை பணிமலையிற் நீயேடோல் நாடறி கெளவை தரும். இது கைக்கிளை; பொது மக்கள் கூற்று. விளக்கம் : கொம்பு அன்னர் - பூங்கொம்பு போன்ற இடையினை யுடைய மகளிர். புறப்பட வெளிப்படையாகத் தெரியாது. பூந்தார் வழுதி - பூமாலே சூடிய பாண்டியன். புறப்படில் உலா வருவதற்காகப் புறப்பட்டு விட்டால், ஆபுகு மாலே - பசுக்கள் மேய்புலங்களிலிருந்து ஊருக்குள் புகும் மாலேக் காலம், அணி மலை - அழகிய மலை ; அருகிலுள்ள மலை என்றும் கூறலாம், தீ - கெருப்பு. நாடறி கெளவை தரும் காட்டார் எல்லாரும் அம்மகளிரின் காதல் நோயை அறிந்து அலர் தூற்றலுக்கு ஏதுவாகிவிடும். கெளவை - அலசின் முதிர்ச்சியாகிய ஆரவாரம் ; பழிச்சொல். ஊரவர் கெளவை எருவாக (குறள் - 1147) என்பது திருக்குறள்,

  • ஊரவர் கஷ்வை எருவிட்டு அன்னேசொல் நீர்படுத்து

ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள் . என்ற திருவாய்மொழிப் பகுதியும் (5 : 3-4) ஈண்டு உளங்கொள்ள அடக்கிவைத்துள்ள மகளிரின் காதல்விருப்பத்திற்குக் கு விளக்கும், பாண்டியனைக் காணுங்கால் அது வெளிப்படுதற்கு மலைத் தீயும் முறையே உவமைகளாக வந்தன. காலேயரு பகலெலாம் போதாகி மாலை அலரும் இயல்புடைய காமத்,ை விளக்கும் இந்த இரண்டு உவமைகளும் பாட்டிற்குப் பொலிவைத் தருகின்றன. (29)