பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

su வேலியே பயிரைத் தின்ருல்! அக்காலத்தில் நெல்ல மாவட்டத்தினுள்ள கொற்கை என்ற ஊர் பாண்டியன் ஆட்சியிலிருந்தது. அந்த ஊரிலுள்ள அனைவரும் மிகவும் நல்லவர்கள்; அரசனுக்கு அடங்கி கடப்பவர்கள். பாண்டியன் அங்குத் தங்கியிருக்கும் காலத்திலும் வழக்கம்போல் மாலையில் உலா வருதல் வழககம். ஒரு நாள் பாண்டியன் உலா வருங்கால் எல்லோரும் முன்னனைக் கண்டு வணங்கி மரியாதை செலுத்துகின்றனர். பருவம் வந்த கங்கை யொருத்தியும் அவனைக் கண்டு தொழுகின்ருள் ; அவன்மீது மையலும் கொண்டுவிடுகின்ருள். அந்த நாள்முதல் அவள் யாரிடமும் பேசுவதில்லை; சரியாக உண்ணுவதும் இல்லை; நன்ருக உறங்குவது மில்லே. இதனைக் கண்ணுற்ற தோழி அவளைத் தனிமையாக நெருங்கி அவளது கிலைக்குரிய காரணங்களை வினவு கின்ருள். தலைவி இவ்வாறு பதிலிறுக்கின்ருள்:

பாண்டியன் உலா வந்தான். எல்லோரும் வணங்கினர் ; யானும் தொழுதேன். அவ்வளவுதான் ; வேருென்றும் செய்யவில்லை. உடனே என் நெஞ்சம், காணம், பெண்மை நலன், தோளின் அழகு முதலிய அனைத்தையும் அவன் கவர்ந்து சென்று விட்டான். அன்று முதல் எனக்கு மன அமைதி இல்லாது போய்விட்டது. உணவும் இறங்கவில்லை உறக்கமும் வரவில்லை. என் துயரத்திற்கு ஏற்ருற் போல இக் கடலும் ஓ’ வென்று ஒலித்துக்கொண்டிருக்கின்றது : என்னை நைந்து உருகச்செய்கின்றது. இந்தக் கரிய கடலுக்கும் அதனுல் சூழப்பட்ட இக் கொற்கையம்பதிக்கும் அரசனும் அவன் தானே. என் குறையை யாரிடம் போய் முறையிடுவது? காத்தலை விட்டுக் கவர்தலே மேற்கொண்டவனிடம் சொல்லிப் பயனென்ன ? வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? என் நிலைமைக்கு என்ன செய்வேன்?’ என்கின்ருள். தன் ஆற்றயைக் கூறி அலமருகின்ருள்.