பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது முறையோ? 77 ی-----سمد.orسیصممهم-------------------------------------حته இந்த கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது: மன்னுயிர் காவல் தனதான வவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின்-என்னுயிக்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு. இது கைக்கிளை , தலைவி தோழியிடம் கிளத்தல்; நெஞ்சினிடம் கவில்வது உமாம். விளக்கம் : மன் உயிர் காவல் - கிலேபேறுடைய உயிர்களைப் பாது காத்தல், தனது ஆன - தன்னுடையது ஆகும். என்னுயிரும் எண்ணப்படுமா யின் - நானும் ஒருத்தி என்று கருதப்பெறுமானல் என் உயிர்க்கே - என்னப் பொறுத்த மட்டிலும் என் சம்பந்தமாக மாத்திரம். சீரொழுகு செங்கோல் . நீதியில் கின்று செங்கோல் ஒச்சும் , செழியன் - பாண்டியன். நீர் ஒழுகப்பால் ஒழுகா ஆறு பாரபட்சமாயும் பராமுகமாயும் இருத்தல், நீரொழுகப் பாலொழுகா வாறு -என்பது, ஒரு பக்கம், நீரொழுகப் பாலொழுகுமாறு என்ற பழமொழியின் சுருக்கம். தாய் ஒருத்தி தனது ஒரு குழந்தைக்குத் தன்னிடத்திலிருந்து பால் சுரங்து மற்ருெரு குழந்தைக்கு நீர் கரந்தாற்போல, மன்னுயிர்களைப் புரக்கும் மன்னன் தனது காவலுக் உட்பட்ட உயிர்களிடையே வேறுபாடு காட்டுகின்ருன் என்பதை விளக்கு கின்றது. இப்பழமொழி. - உள்ளத்தை உருக்கும் பாடல். காதல் மயக்கம் குற்றமற்ற வனையும் குற்றமுடையவளுக எண்ணச் செய்கின்றது. (31) (பா வே.). 4. வில்வுயிருள். அ முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்த் தலக்க்கும் இறைதிரியான் நேரொக்க வேண்டும்-முறைதிரிந்து நேரொழுகா னுயின் அதுவாம் ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு. -பழமொழி நானூறு-245.