பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலின் ஏக்கம் 79 இது கைக்கிளை; தலைவி தோழியிடம் கூறுவது நெஞ்கொடு கிளத்தலுமாம். விளக்கம் : தானேல் தனிக்குடைக்காவலனுல் - அவனைக் கூர்ந்து கோக்கிளுல், அவன் தனியரசு புரியும் மன்னவன். ஆல் - அசை. தனிக் குடை ஒப்பற்ற குடை , ஒருவருக்கும் உட்படாத வெண் கொற்றக்குடை, காப்பதுவும் - தான் ஆளுகின்ற எல்லைப் பரப்பும். வானேற்ற வையகம் எல்லா மால் . வானவெளி எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கும் இப் பூவலயம் முழுவதும். எளியேன் - வலிமையற்றவள் என்றவாறு. ஈர்ந்தண்தார் மாறன். குளிர்ச்சியான ஈரமுள்ள மாலையை அணிந்த பாண்டியன், மாறன் - பாண்டி யன். அளியானேல் - அருள் செய்யாவிட்டால் கருனை கூர்த்து என்னைக் காதலிக்காவிட்டால். அன்று என்பார் ஆர் . மறுத்துச் சொல்லக்கூடியவர் கள் யாவர். அளியானேல் அன்றென்பார் ஆர்' என்ற இறுதியடியில் காதலின் துடிப்பும் ஏக்கமும் கன்ருய்த் தொனிக்கின்றன. பாடலைப் பன்முறைப் பாடிப் பாடி இந்த அடிக்கு அழுத்தங்கொடுத்தால் இவை நம் மனத்திற்கும் தட்டுப்படும். (32)