பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[34] கனவிலும் காதல்! தென்னவன்பால் உள்ளத்தைப் பறிகொடுத்த தெரிவை பொருத்தி உறங்குகின்ருள் அவளுக்கு நல்ல தூக்கம் பிடிக்க வில்லை. ஆல்ை, ஊர் முழுவதும் நல்ல உறக்கத்திலிருக்கின்றது. நடு கிசியில் இவள் திடீரென்று படுக்கையை விட்டு எழுகின்ருள். அருகில் ஏதோ ஒன்றைத் தடவிப் பார்த்தவண்ணம் இருக்கின்ருள். அருகில் உறங்கின தோழி வளையல் ஒலியைக் கேட்டுத் திடுக்கிட் டெழுந்து, என்ன தேடுகின்ருய், இங்கேரத்தில்?" என்று வினவு கின்ருள், தலைவி என்ன செய்வாள், பாவம்? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திகைக்கின்ருள். சொல்லக்கூடிய செய்தியா அது? ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு இறுதியில் சொல்லியே விடுகின்ருள் : தோழி, சொல்லுவதற்கு என் மனம் காணப்படுகின்றது. யானைப்படைகளையுடைய பாண்டியன் வந்து என்னை நெருங்கிளுன் , அன்பால் எனக்குக் காதலின்பம் தருபவன் போல் கொஞ்சிப்பேசினன். யான் அதனை உண்மையென்று கருதி அருகில் என் காந்தள் விரல்களால் தடவிப் பார்த்தேன். ஆளில்லை : திடுக்கிட்டு எழுந்தேன். அந்தக் கனவு கிலையிலேயே திரும்பவும், படுக்கையைத் துழாவினேன்! என் தனிமைத் துயர் ஒழிந்தபாடில்லை. எனது கிலே இது!’ என்கின்ருள் ; காணப்படுகின்ருள். தலைவி தான் கனவில் ஏமாற்றம் அடைந்த கிலையை உள்ளம் உருகும்படியாகத் தோழியிடம் கூறியதாகக் கவிஞர் புனைந்த சொல் லோவியம் கம்மையும் மனம் உருகும்படி செய்துவிடுகின்றது. கவிஞரின் சொல்லோவியம் இது : களியானேத் தென்னன் கனவின்வந் தென்னை யளியானளிப்பானே போன்ருன்-றெளியாதே செங்காந்தண் மெல்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்டே னென்னலால் பான்.:

  • தொல் பொருன் புறத்திணையியல் 28-ஆம் நூற்பாவின் உரையில் கச்சினுர்க் கினியர் காட்டிய மேற்கோள்.