பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[38] வழி தெரியவில்லையே! இயமான் வழுதியினிடத்துக் காதல் கொள்ளுகின்ருள் வனிதை யொருத்தி, காதல் நோய் அவளேப் பெரிதும் வெதுப்புகின்றது. உடல் மெலிந்து உள்ளமும் சோர்வடைகின்றது. கையிலுள்ள வளை யல்களும் நெகிழ்கின்றன. இந்நிலையைக் கண்ட தோழி, 'உடம்புக்கு என்ன ? வரவரக் கீழே போய்க்கொண்டிருக்கின்ருயே ?' என்று வினவுகின்ருள். தலைவி தான் பாண்டியன்மீது கொண்ட காதலையும், அவன் உலா வருதலையும் பார்க்கக்கூடாது என்ற அன்னையரின் காவலையும் வெளியிடுகின்ருள். ஒருநாள் மாலை. அன்னையரின் காவல் இல்லாத நேரம். இது தலைவிக்குத் தெரியாது. இங்கிலையில் பாண்டியன் உலா வருகின்ருன், தோழி தலைவியிடம் ஓடோடியும் வந்து, 'அன்னையரின்காவல் நெகிழ்க் துள்ளது. பாண்டியன் உலா வருகின்றன். அவனை வந்து காண்பா யாக காற்று உள்ளபோதே துற்றிக்கொள்க. இச்சமயம் தவறினுல் வேறு நல்ல சமயம் வாய்ப்பது அரிது!’ என்று கூறுகின்ருள். தலைவிக்கு என்னது செய்வது என்று புரியவில்லை ; மனம் ஒருபக்க மும் செயற்பட முடியாது திண்டாடுகின்றது. வீட்டின் உள்ளேயும் இருப்பதற்கு முடியவில்லை; வெளியில் வந்து பாண்டியனைக் காண்ப தென்ருலோ நாணம் தடையாக இருக்கின்றது! தன் மனநிலையைத் தோழியிடம் இங்ங்ணம் வெளியிடுகின்ருள்: " தோழியே, யான் பாண்டியனைப் பார்க்காமல் இருந்தால் என் கை வளையல்கள் நெகிழ்கின்றன ; அவன் உலா வருங்கால் பார்ப்பு தற்கு முயன்று முன்னின்று காணத் தொடங்கினல், காணம் பெருக் தடையாக அமைந்துவிடுகின்றது. காணத்தை இழந்தால் பெண்மை கலனே அழிந்து விடும். உயிரினும் சிறந்ததல்லவா காணம்? நானத் தையும் விடக்கூடாது; பெண்மை நலனும் அழியக் கூடாது. கை வளையும் சோரக் கூடாது ; அவனைக் காணுதும் இருத்தலாகாது.