பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ö இருவகையிலும் துன்பம்! தமிழ்நாட்டில் தீர்த்தங்களுக்குக் குறைவு இல்லை. ஆறு, கடல், குளம் எல்லாம் அங்குத் தீர்த்தங்கள்தாம். இராமேச்சுவரம், திருச் செந்தூர், கன்னியாகுமரி இவையெல்லாம் தீர்த்தங்கள்; இவ்விடங் களில் கடல் தீர்த்தமாக அமைகின்றது. பொருகை, காவிரி, குற்ருலம் போன்ற இடங்களில் ஆறுகள் தீர்த்தங்களாக அமைகின்றன. சாதா ரணமாக ஆறுகளையும், கடல்களையும் அரசர்களை யொட்டிப் பாராட் டும் வழக்கம் கினப்பிற்கெட்டாத நெடுங்காலமாகவே தமிழ் நாட்டில் இருந்து வந்துள்ளது. காவிரியைச் சோழளுேடும், வைகையைப் பாண்டியைேடும் ஒட்டி வழங்குவதை மகளிர் நன்கு அறிந்திருந்த னர். வைகைநீர் வழுதிமயம் என்று ஒருத்தி சொன்னல் அதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்த உணர்ச்சி எல்லோரும்-குறிப்பாகப் பெண்கள் - அறிந்த ஒன்றே. 区 蓝 宽 பெண்ணுெருத்தி, பாண்டியன்மீது மனம் போக்கி மதியிழந் திருக்கின்ருள். எச்செயலையும் காலத்தில் செய்து முடிக்கும் பழக்கம் அவளிடம் இல்லாது போய் விடுகின்றது. அவள் ஒருசமயம் செவிலி யருடன் வைகையாற்றிற்கு நீராடச் செல்லுகின்ருள். தன்னையே மறந்து அவள் நீண்டநேரம் நீரில் குடைந்து குடைந்து ஆடுகின்ருள். இதல்ை அவள் வாயின் சிவப்பை விழி வாங்க, மலர் க் கண் வெளுப்பை வாய் வாங்க க் காதலனுடன் கூடிய காதலியின் நிலையை அடையக் கண்ட செவிலியர் அவளைக் காலக் தாழ்த்தின மைக்காகக் கடிகின்றனர். மறுநாள் அவள் நீராடச் சென்றபொழுது ஆற்றில் இறங்காமல் கரையின்கண்ணே திகைத்து கிற்கின்ருள். இப்பொழுது செவிலியர் நீரில் இறங்காமல் காலந்தாழ்த்தியமைக்குக் கடிகின்றனர். இரண்டு முறையிலும் செவிலியர் கடிந்ததைத் தலைவி வேறுவிதமாகப் பொருள் படுத்திக் கொள்ளுகின்ருள்.

  • கலிங்கத்துப் பாணி - தாழி. 61.