பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகையிலும் துன்பம் ! 33 இவற்றை அவள் தோழியிடம் இவ்வாறு கூறுகின்ருள் : " தோழியே, வைகையாற்றில் யான் ஓயாது மூழ்கி நீராடினுல் வழுதி யின்பால் வைத்த ஆராக் காதலாலல்லவா இப்படி ஆடுகின்ருள் என்று கூறி என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர் என் அன்னே மார். நீரில் மூழ்காமல் கரையின்மீது சோர்ந்து உட்கார்க்திருந்தாலோ தென்னவன்பால் வைத்துள்ள தீராக் காதலை மறைப்பதற்குத்தான் இவ்வாறு இருக்கின்ருள் என்பது அவர்களின் கினைப்பு. இங்ங்ணம் நீராடலும் துன்பம்; ஆடாதிருத்தலும் துன்பம். பெண்ணுகப் பிறந்தால் இருவகையிலும் துன்பம்! இதற்கு என் செய்வது ? " என்கின்ருள். இந்தப் பெண்ணின் மன கிலையைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது : ஏற்பக் குடைந்தாடி லேசுவ சல்லாக்கால் மாற்றி யிருந்தா ளெனவுரைப்பர்-வேற்கண்ணுய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீ ரெல்லா மெனக்கோ ரிடர். இது கைக்கிளை , தலைவி தோழிக்குரைத்தது. விளக்கம் : ஏற்பக் குடைந்து ஆடில் பொருந்தும் வகையாகத் திளைத்து நீராடினுல். குடைந்தாடுதல் என்பது, கீரினுள் துதைந்து துதைந்து மூழ்குதல். அதாவது, தண்ணீரைக் கையால் எற்றி எற்றி அனைத்து மூழ்குதல். ஏசுவர் - கடிவர்; தூற்றுவர். அல்லாக்கால் ரோடாது இருக் தால், மாற்றியிருந்தாள் - தன் காதல் மறைத்து இருக்கின்ருள். வையை யார் கோமானின் ஆற்றுநீரில் குளித்தாலும் பொல்லாதது; குளியாமலிருந்தா லும் பொல்லாதது கொல் யானை கொல்லுகின்ற யானை மாறன் - பாண்டியன். இடர் - துன்பம். காதல் வெறியை வையை நீரில் வைத்துக் காட்டியது உயர்ந்த கவிதை நெறியைச் சார்ந்தது; மிக உன்னதமான பாவனைப் பண்பை யொட்டியது. * (39)

  • வெற்பென்று வேங்கடம் பாடும் என்ற பேயாழ்வாரின் பாசுரத்தில் (மூன்ரும் திருவந்தாதி-69) காதல்வெறி எங்ங்னம் நீருடன் கலக்கின்றது என்பதைக் காண்க.